கிரஷர் உரிமையாளர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கட்டுமான பொருட்களை குறைந்த வாடகைக்கு விநியோகம் செய்ததை கண்டித்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் சங்கம் வாபஸ் பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி ஆர் சண்முகப்பா, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.