நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களை குறிவைத்து போலி லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், லாட்டரி விற்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.15 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலான லாட்டரி சீட்டுகளுக்கு ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிசு கிடைக்கும் என ஆசைகாட்டி தொழிலாளர்களை மோசடி செய்யும் போலி லாட்டரி கும்பல், காலை 8 மணி முதல் இரவு 10 மணி முதல் மணிக்கு ஒருமுறை குலுக்கல் நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த ஏமாற்று கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.