கையில் ரத்தம் வழிந்தபடி சாலையில் ஓடி வந்த பெண். சில நொடிகளில் பெண்ணின் வீட்டிற்குள் இருந்து கேட்ட பயங்கர வெடி சத்தம். வீட்டிற்குள் கரிக்கட்டையாக கிடந்த ஆண் சடலம். பக்கத்திலேயே ஆக்ரோஷத்துடன் அமர்ந்திருந்த மற்றொரு ஆண். காவல்துறையினரின் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள். கத்தியால் வெறியாட்டம் ஆடியது மட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ கொளுத்தி போட்ட கொடூரன். நடந்தது என்ன?* கையில் ரத்தம் வழிந்த படி தெருவில் ஓடி வந்த பெண்* பெண்ணின் வீட்டிலிருந்து கேட்ட பயங்கர வெடி சத்தம் * வீட்டிற்குள் கரிக்கட்டையாக கிடந்த ஆண் சடலம்* தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்த மற்றொரு ஆண்காலையில 5.30 மணி இருக்கும், நாயக்கன்பாளையத்துல உள்ள 35 வயசு மதிக்கத்தக்க ஒரு பெண், கையில இருந்து ரத்தம் சொட்ட சொட்ட ரோட்டுக்கு ஓடி வந்திருக்காங்க. விடிஞ்சும், விடியாமலும் ஆடை முழுக்க ரத்தக் கறையோட வந்த பெண்ண பாத்து தெருவுல இருந்தவங்க பதட்டமாகி நின்னுருக்காங்க. சிலர், அவங்க பக்கத்துல போய் என்னமா ஆச்சு? கையில என்ன வெட்டு காயமா இருக்குன்னு கேட்டுருக்காங்க. அந்த நேரத்துல, அந்த பெண்ணோட வீட்டுக்குள்ள இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுருக்கு. கூடவே, ஒரு ஆண் அலறல் சத்தமும் பயங்கரமா கேட்டுருக்குது. உடனே, என்ன ஏதுன்னு அக்கம்பக்கத்துல இருந்தவங்க ஓடிப்போய் பாத்தப்ப, அங்க 52 வயசு மதிக்கத்தக்க ஆண் ஒருத்தரு தீயில கருகி சடலமா கிடந்திருந்துருக்காரு. பக்கத்துலேயே ஒருத்தரு தலையில கை வச்சபடி உக்காந்திட்டு இருந்துருக்காரு.* சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை* விசாரணையில் தெரிய வந்த திடுக்கிடும் தகவல்கள்இத பாத்ததும் கதிகலங்கி போன மக்கள், கையில வெட்டு காயங்களோட வந்த பெண்ண மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிட்டு, போலீஸுக்கு தகவல் சொல்லிருக்காங்க. அடுத்து, கொஞ்ச நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்தவங்க, வீட்டுக்குள்ள இருந்த ஆண் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சிட்டு, பக்கத்துல இருந்தவன பிடிச்சு விசாரணை பண்ணாங்க. அதுலதான், வீட்டுக்குள்ள நடந்த பகீர் சம்பவமே வெளிச்சத்துக்கு வந்துச்சு. * திலீபன் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள்* சொந்தமாக உணவகத்தை நடத்தி வந்த திலீபன்* திலீபன் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த எஸ்தர்* திலீபனுக்கும், எஸ்தருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருப்பத்தூர சேர்ந்தவரு 52 வயசான திலீபன். இவருக்கு கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க. இந்த சூழல்ல, பிழைப்புக்காக கோவைக்கு வந்த திலீபன், நாயக்கன்பாளையத்துல சொந்தமா ஹோட்டல் ஆரம்பிச்சு நடத்திட்டு இருந்துருக்காரு. இவரோட ஹோட்டல்ல கடந்த மூணு மாசத்துக்கு முன்னாடி 35 வயசான எஸ்தர்-ங்குற பெண் வேலைக்கு சேந்துருக்காங்க. அப்ப, திலீபனுக்கும், எஸ்தருக்கும் இடையில நெருக்கம் ஏற்பட, அது கொஞ்சம் கொஞ்சமா பார்டர கிராஸ் பண்ணிருக்கு. * எஸ்தருக்கு ஏற்கனவே 3 திருமணமானதாக தகவல்* எஸ்தரின் தகாத உறவால் பிரிந்து சென்ற 3 கணவர்கள்ரெண்டு பேரும் அடிக்கடி பல இடங்களுக்கு போய் எல்லை மீறி பழகுனதா சொல்லப்படுது. எஸ்தருக்கு ஏற்கனவே மூணு பேரோட கலயாணமாகி அந்த 3 பேருமே ரெண்டு, மூணு வருஷம் மட்டும் வாழ்ந்துட்டு பிரிஞ்சி போய்ட்டாங்க. காரணம் எஸ்தருக்கு பல ஆண்களோட தகாத உறவு இருந்ததா சொல்லப்படுது.* எஸ்தருக்கு ஆட்டோ ஓட்டுநர் பிரேமானந்துடன் பழக்கம்* முதல் மனைவி உயிரிழப்பு, பிரிந்து சென்ற 2 மனைவிகள்* 4வது எஸ்தருடன், பிரேமானந்துக்கு ஏற்பட்ட உறவு* பணத்திற்காக மட்டுமே பிரேமானந்துடன் பழகி வந்த எஸ்தர்எஸ்தருக்கு, திலீபன மூணு மாசமா தான் தெரியும். அதுக்கு முன்னாடியே, நாலாவதா ஆட்டோ டிரைவர் பிரேமானந்தோட தகாத உறவுல இருந்துருக்கா எஸ்தர். பிரேமானந்தோட முதல் மனைவி உடல்நலக்குறைவால உயிரிழந்ததுக்கு அப்புறம், சில மாசம் தனிமையில இருந்தவரு, ரெண்டாவது கல்யாணம் பண்ணிருக்காரு. ஆனா, அந்த வாழ்க்கையும் அவருக்கு நல்லபடியா அமையல. அதே மாதிரி மூணாவது மனைவியும், பிரேமானந்தை பாதியிலேயே விட்டுட்டு போயிட்டாங்க. பிரேமானந்துக்கு இருந்த மது பழக்கமும், சந்தேக புத்தியும் தான் அவரோட திருமண வாழ்க்கைய தலைகீழா புரட்டி போட்டுருக்குது. இதுக்கு இடையில தான், சவாரிக்கு போகும்போது, பிரேமானந்துக்கு எஸ்தர் அறிமுகமாகிருக்காங்க. ஆரம்பத்துல, நண்பர்களா பழகுன ரெண்டு பேத்துக்கும் இடையில நெருக்கம் ஏற்பட்டு, கல்யாணமும் பண்ண முடிவு பண்ணிருக்காங்க. ஆனா, எஸ்தருக்கு, பிரேமானந்த கல்யாணம் பண்ணிக்க துளியும் விருப்பம் இல்ல. அவரோட பணத்துக்காக மட்டும்தான் காதல் என்ற பெயர்ல பழகிட்டு இருந்துருக்காங்க எஸ்தர்.* காதலி எஸ்தருக்கு வீடு கட்டி கொடுத்த பிரேமானந்த்* பிரேமானந்திடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்திய எஸ்தர்* எஸ்தர் மீது கடுங்கோபத்தில் இருந்து வந்த பிரேமானந்த்* எஸ்தரின் தகாத உறவை கேள்விப்பட்டதும் ஆத்திரம்ஆனா, அது தெரியாம பிரேமானந்த், காதலி நம்மள உயிருக்கு உயிரா காதலிக்கிறான்னு நினைச்சு அவங்களுக்கு நாயக்கன்பாளையத்துல ஒரு சொந்த வீட்டையும் கட்டி கொடுத்திருக்காரு. அதுக்கப் பிறகு தான், எஸ்தரோட உண்மையான முகம் பிரேமானந்துக்கு தெரியவந்து, ரெண்டு பேத்துக்கும் இடையில சண்ட வர தொடங்கிருக்கு. பிரேமானந்தோட பேசுறத முழுசா நிறுத்துன எஸ்தர், அதுக்கப்புறம் திலீபனோட ஹோட்டல்ல வேலைக்கு சேந்திருக்காங்க. அங்க திலீபனோட தகாத உறவு ஏற்பட்டு ரெண்டு பேரும் ஒரே வீட்டுல கணவன் - மனைவி போல வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. * திலீபனின் உணவகத்திற்கு சென்ற பிரேமானந்த்* உணவகத்தில் இருந்த எஸ்தரை கத்தியால் வெட்டிய பிரேமானந்த்இந்த விஷயம் பிரேமானந்துக்கு போக, ஜனவரி 5ந் தேதி திலீபனோட ஹோட்டலுக்கு போயிருக்காரு. அங்க காய்கறி நறுக்கிக்கிட்டு இருந்த எஸ்தர கத்தியால வெட்டிருக்காரு. அத தடுக்க வந்த திலீபனையும் வெட்டிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்காரு. அதுக்குப்பிறகு, அங்க இருந்த மக்கள் தான் வெட்டு காயத்தோட இருந்த ரெண்டு பேரையும் ஹாஸ்பிட்டல்ல சேத்துருக்காங்க. * அதிகாலையில் எஸ்தர் வீட்டிற்கு சென்ற பிரேமானந்த்* எஸ்தரின் கையை கத்தியால் வெட்டிய பிரேமானந்த்அடுத்து, திலீபன் குடுத்த புகார் அடிப்படையில கேஸ் ஃபைல் பண்ண போலீஸ், தாக்குதல்ல ஈடுபட்ட பிரேமானந்த அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சாங்க. ஆனா, ஜெயிலுக்கு போன 20 நாள்ல ஜாமின்ல வெளியே வந்த பிரேமானந்துக்கு, எஸ்தர் மேல இருந்த ஆத்திரம் கொஞ்சம்கூட குறையல. சம்பவத்தனைக்கு, அதாவது செவ்வாய் கிழமை காலையில 5 மணியளவுல நாயக்கன்பாளையத்துல உள்ள எஸ்தர் வீட்டுக்கு போய் கதவ தட்டிருக்கான். இவ்வளவு சீக்கிரம் யாரு கதவ தட்றதுன்னு எஸ்தர் முணுமுணுங்கிட்டே கதவ ஓபன் பண்ண, வாசல்ல வெறியோட நின்னுட்டு இருந்த பிரேமானந்த, மறைச்சு வச்சிருந்த கத்தியால, எஸ்தரோட கையிலேயே வெட்டிருக்கான். அவங்களோட அலறல் சத்தத்த கேட்டு பெட்ரூம்ல இருந்து திலீபன் ஓடிவந்துருக்காரு. அப்போ, திலீபனும் வீட்டுக்குள்ள இருக்குறது தெரிஞ்சதும் ஆத்திரத்தோட உச்சிக்கு போனவன், எஸ்தர விட்டுட்டு திலீபன கண்மூடித்தனமா வெட்டிருக்கான். அதுமட்டுமில்லாம, ஆத்திரம் அடங்காம வீட்டுக்குள்ள இருந்த கேஸ் சிலிண்டர திறந்துவிட்டு தீ வச்சுருக்கான். * அறையில் இருந்து ஓடி வந்த திலீபனை பார்த்து ஆத்திரம்* திலீபனை கத்தியால் வெட்டி கொன்ற பிரேமானந்த்* சிலிண்டரை திறந்து தீ வைத்த கொடூரம்* பிரேமானந்தை கைது செய்து போலீசார் விசாரணைஇதுல, திலீபன் பலத்த தீக்காயமடைஞ்சு சம்பவ இடத்துலேயே தீயில கருகி உயிரிழந்துட்டாரு. திலீபன கொலை பண்ணிட்டு தப்பிச்சு போகாம வீட்டுக்குள்ளே இருந்துருக்கான் பிரேமானந்த். விசாரணையில, மொத்த உண்மையும் தெரிய வந்துச்சு. அடுத்து, பிரேமானந்த் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், அவன அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க. Related Link மடியில உக்காரு, தோளை தொட்டு பேச்சு