சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உலகம்பட்டி கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயி, சொந்த முயற்சியில் குறைந்த செலவில் களையெடுக்கும் இயந்திரத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். வெறும் 2900 ரூபாய் செலவில், பிவிசி பைப்புகள், இரும்பு சங்கிலிகளை கொண்டு 15 கிலோ எடையில் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ள இயற்கை விவசாயி சிவராமன், நடவு செய்து 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் வயலில் இழுவை போல் பயன்படுத்தி களைகளை அகற்றிவிட முடியும் என தெரிவித்தார்.