கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் 4 பிரதான கோபுரங்கள் மற்றும் 5 உள் கோபுரங்கள் என 9 கோபுரங்களும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. கோவில் கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும் கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது.