கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ரகுநாதபுரம் பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் காணப்படுகிறது.