சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் பங்கேற்ற நபர் உயிரிழந்தார்.கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற போட்டியில், ஒரே நேரத்தில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்யாததே இதற்கு காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டினர்.