வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயன்றவர்கள் மற்றும் வாங்கி வந்தர்கள் என 5 பேரை வனத்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அகரம் கிராமத்தைச் சேர்ந்த சுக்ரன், கிருஷ்ணன், குப்பன், ராஜா மற்றும் குணசேகரன் ஆகியோர் வனத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கினர்.