தைப்பூச விழாவை முன்னிட்டு, வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த திருச்சி சமயபுரம் மாரியம்மனை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 8-ஆம் நாளில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.