கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குண்டம் திருவிழா வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் புடைசூட கோவிலுக்கு மேள தாளங்களுடன் கொண்டுவரப்பட்ட 81 அடி உயரமுள்ள மூங்கில் கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றப்பட்டு குண்டம் திருவிழா தொடங்கியது.இதையும் படியுங்கள் : ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த சிபிஐ அதிகாரிகள்