மதுரையில் பெய்த தொடர் மழையால் மாடக்குளம், அச்சம்பத்து, விராட்டிப்பத்து ஆகிய கண்மாய்கள் நிரம்பி கிருதுமால் வாய்க்கால் வழியாக வெளியேறும் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருதுமால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் ஆங்காங்கே குப்பைகள் அடைத்து கொண்டிருந்ததால் பொன்மேனி, தானத்தவம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 60 ஏக்கரில் பயிரப்பட்டிருந்த வாழை மரங்கள் நீரில் மூழ்கின. தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்றது.