திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பூட்டிக் கிடக்கும் வீட்டிற்கு லட்சக்கணக்கில் மின் கட்டண பில் வந்ததால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். லட்சுமிபுரத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வத்தலகுண்டுடில் குடியிருந்து வரும் நிலையில், இவருக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரும் குடி இல்லாமல் பூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் முருகேசனின் வீட்டிற்கு ரூபாய் 7 லட்சத்து 64 ஆயிரத்தி ஒரு ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என அவரது மொபைலுக்கு, குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை அடுத்து மின்பகிர்மான அலுவலகத்தில் முறையான பதில் அளிக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.