நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப் பகுதியில் இருந்து கிராம பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். ஜெகதளா பகுதிக்கு சென்ற மினி பேருந்து ஓட்டுநரை அப்பகுதியில் காரில் மதுபோதையில் வந்த ஐந்து நபர்கள் தாக்கியதாக புகார் தெரிவித்து, 32 மினி பேருந்துகளையும் நிறுத்தி வைத்து மினி பேருந்து ஓட்டுநர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் ஐந்து நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் மினி பேருந்தை இயக்கினர்.இதையும் படியுங்கள் : நடந்து சென்றவர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய சிசிடிவி