சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்ரமணியன், மலைப்பாதையில் சுமார் 25 கிலோ மீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்களின் மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார். குரும்பபட்டி தொடங்கி கருங்காலி மற்றும் குடவம்பட்டி கிராமம் வழியாக சொனப்பாடிக்கு நடந்தே சென்ற அமைச்சர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ பெட்டகத்தை ஆய்வு செய்து மருத்துவ வசதி குறித்தும் கேட்டறிந்தார்.