திமுகவில் அடிமை சேவகம் செய்பவர்கள்தான் அமைச்சர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார். மதுரை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆளும் திமுக அரசு அடக்குமுறையை கையாள்வதாகவும், மக்கள் மன்றத்தில் பேசினால் கைது செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.