தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் பிரிவு சாலையில், பைக் மீது மினி டெம்போ மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். சின்னபுதூரை சேர்ந்த சம்பத்குமார் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது பைக் மீது மினிடெம்போ மோதி விபத்துக்குள்ளானது.