புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே, காணாமல் போன நர்சிங் கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருக்காக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சவுமியா என்ற அந்த மாணவி, கடந்த 25- ம் தேதி இரவு காணாமல் போன நிலையில், அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.