வீட்டிலிருந்த தங்கை திடீர் என மாயம். தங்கையை தேடி அலைந்த அக்கா. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார். பக்கத்து கிராமத்தில் கிடந்த மணல் குவியல். சந்தேகப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் சொன்ன விவசாயிகள். சந்தேகத்துக்குரிய இடத்தை தோண்டி பார்த்த போது காத்திருந்த பேரதிர்ச்சி. நடந்தது என்ன?தருமபுரி இண்டூர்ல உள்ள ஒசஅள்ளி புதூர்-ங்குற கிராமத்த சேர்ந்த ராஜேஸ்வரி, இவங்க தன் அக்கா முனியம்மாள் குடும்பத்தோட சேந்து ஒரே வீட்டுல இருந்துருக்காங்க. இதுக்கு நடுவுல, முனியம்மாள் வழக்கம்போல வெளிய போயிட்டு வீட்டுக்கு வந்து பாத்தப்ப, ராஜேஸ்வரி வீட்டுல இல்ல. அக்கம்பக்கத்துல உள்ள சொந்தக்காரங்ககிட்ட கேட்டப்ப, அவங்க தெரியாதுன்னு சொல்லிருக்காங்க. ராஜேஸ்வரி அடிக்கடி தன்னோட ஸ்கூட்டிய எடுத்துக்கிட்டு எங்கேயாச்சும் போயிட்டு வருவாங்களாம். அதேமாதிரி வெளிய எங்கேயாவது போயிருப்பான்னு நினச்சு முனியம்மாள் சாதாரணமா விட்டுருக்காங்க. ஆனா, இரவாகியும் ராஜேஸ்வரி வீடு திரும்பவே இல்ல.அவங்களோட ஃபோனும் சுவிட்ச் ஆப்லயே இருந்துருக்கு. சொந்தக்காரங்க வீடு, பிரண்ட்ஸ் வீடுன்னு பல இடங்கள்ல தேடியும் எந்த பலனும் இல்ல. அதனால, போலீஸ் ஸ்டேஷன்ல, காணாமபோன தங்கச்சி ராஜேஸ்வரிய கண்டுபிடிச்சு தரக்கோரி முனியம்மாள் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க. அந்த அடிப்படையில, போலீஸ் ராஜேஸ்வரிய தேடிட்டு இருந்தாங்க. இதுக்கு நடுவுல, முனியம்மாளோட வீட்டுல இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துல உள்ள ஒரு இடத்துல சந்தேகப்படும்படியா மணல் குவிஞ்சு கிடந்திருக்கு. அங்க இருந்த விவசாயிகள் அந்த மணல் குவியல பாத்து சந்தேகப்பட்டுருக்காங்க. அதுவும் ஒரு ஆள குழி தோண்டி புதச்சா எப்படி மணல் குவிஞ்சு கிடக்குமோ, அதே மாதிரி இருந்ததால, அவங்க சந்தேகம் அதிகமாகிருக்கு.அதனால விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லிருக்காங்க. அதுக்கடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், சந்தேகத்துக்குரிய அந்த இடத்த தோண்டி பாத்தப்ப, மண்ணுக்குள்ள ராஜேஸ்வரியோட சடலம் புதைக்கப்பட்டிருந்துருக்கு. அந்த நேரத்துல, போலீஸுக்கு இன்னொரு அதிர்ச்சி தகவல் தெரியவந்திருக்கு. அக்கா வீட்டுல தங்கியிருந்த ராஜேஸ்வரி காணாம போன, அதேநேரம், முனியம்மாளோட கணவன் அனுமந்தும் காணாம போயிருக்காரு. இந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து போலீஸோட சந்தேகப் பார்வை, அனுமந்த் பக்கம் திரும்பிருக்கு. அந்த சந்தேகத்த உறுதிப்படுத்துற மாதிரி, விவசாயி ஒருத்தரு, இறப்பதற்கு முன் ராஜேஸ்வரி ஒரு ஆண்கூட சண்ட போட்டுட்டு இருந்ததாவும், அதுக்குப்பிறகு அந்த ஆண் மட்டும் அங்க இருந்து கிளம்பி போனதாவும் சொல்லிருக்காரு.உடனே போலீஸ்காரங்க அனுமந்தோட ஃபோட்டவ காட்டி, இவருதான் அந்த பெண்கூட சண்ட போட்டவரான்னு கேட்டுருக்காங்க. ஆமா, சார் இந்த ஆளுதான்னு சொல்லிருக்காரு அந்த விவசாயி. அத வச்சு பாத்தப்ப, ஒருவேளை அனுமந்துதான் கொலையாளியோன்னு போலீஸுக்கு சந்தேகம் வலுத்திருக்கு. அதுக்குப்பிறகு, அனுமந்து எங்க இருக்காருன்னு தேடிக்கண்டுபிடிச்சு விசாரிச்சப்பதான், ராஜேஸ்வரி மரணத்துல இருக்குற மர்மம் விலகிச்சு. அனுமந்துக்கும், முனியம்மாளுக்கும் 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. அனுமந்துக்கு தம்பி உறவான பிரபுவதான் ராஜேஸ்வரி கல்யாணம் பண்ணி ஒரே வீட்டுல வாழ்ந்துட்டு வந்துருக்காங்க. இந்த சூழல, அனுமந்துக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையில தகாத உறவு ஏற்பட்டுருக்கு. மனைவியோட தங்கச்சின்னு கூட பாக்காம அனுமந்த் அவங்களோட நெருக்கமா இருந்துருக்கான். வீட்டுல யாரும் இல்லாதப்ப அனுமந்தும், ராஜேஸ்வரியும் அடிக்கடி தனிமையில இருந்துருக்காங்க. இப்படி யாருக்கும் தெரியாம தகாத உறவுல இருந்த ரெண்டு பேத்துக்கும் இடையில தகராறு வந்துருக்குது. சம்பவத்தனைக்கு, வெளியே கிளம்பிட்டு ராஜேஸ்வரிக்கு ஃபோன் பண்ண அனுமந்த் அவங்கள தளவாய் அள்ளி பகுதிக்கு வர சொல்லிருக்கான். அதுக்குப்பிறகு, ராஜேஸ்வரியும் தன்னோட ஸ்கூட்டிய எடுத்துக்கிட்டு அங்க போனாங்க. நேர்ல சந்திச்சு பேசுன ரெண்டு பேத்துக்கும் இடையில வாக்குவாதம் ஏற்பட்டுருக்கு. அப்ப ராஜேஸ்வரி முன்ன, மாதிரி ஏன் பேசுறது இல்லன்னு கேட்டு, அனுமந்த் சண்ட போட்டுருக்கான். இதனால ரெண்டு பேருக்கு இடையில வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு.அப்போ, ஆத்திரமடைஞ்ச அனுமந்த் கீழ கிடந்த கல்ல எடுத்து ராஜேஸ்வரி தலையிலேயே ஓங்கி அடிச்சிருக்கான். அதுல, அவங்க மயக்கமடைஞ்சி கீழ விழுந்துருக்காங்க. அதோட விடாத அனுமந்த், அந்த இடத்துலேயே குழி தோண்டி மயக்கத்துல இருந்த ராஜேஸ்வரிய உயிரோட புதைச்சிருக்கான். அதுக்குப்பிறகு, தன்னோட ட்ராக்டர எடுத்துக்கிட்டு அங்க இருந்து தப்பிச்சு போயிருக்கான் அனுமந்த். விசாரணையில, மொத்த உண்மையும் தெரியவரவே, அவன் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீ அனுமந்த அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - 300 சவரன் நகைகளுடன் எஸ்கேப்