பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில், மாநகராட்சி அதிகாரிகள் சிறு, குறு தொழில் வியாபாரிகளிடம் சோதனை செய்வதாக கூறி மிரட்டி பணம் பறிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தெரிவித்துள்ளது.சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேரவை தலைவர் சௌந்தரராஜன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.