ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். தனியார் அரிசி ஆலைகளில் மழைநீர் புகுந்ததால் அங்கு குடோனில் வைக்கப்பட்டிருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் ஐந்தாயிரம் அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்தன