கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகன் மற்றும் மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டது. பைனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் திருவள்ளுவர், குடும்பத்தினரை கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதால் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததாக கூறி மனைவி ரத்னா, மகன் நிதேஷ், மகள் மனீஷா ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர்.