புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் பகுதிகளில் வரும் 15,16,17ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக தடுப்பு வேலி, விழா மேடை, குடிநீர் தொட்டி, பார்வையாளர் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 17ஆம் தேதி அலங்கநல்லூரில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியை துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.