சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்தி பொதுமக்களின் அடையாள ஆவணங்களை பெற்று வங்கிக்கடன் பெற்று பல கோடி ரூபாய் நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த சாரா என்ற பெண், குறைந்த வட்டியில் லோன் பெற்றுத் தரப்படும் என மக்களிடம் கூறி ஆவணங்களைப் பெற்று, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் போலியாக கணக்கு தொடங்கி லோன் பெற்றுள்ளார். லோன் தவணை கட்டாமல் இருந்த நிலையில் வங்கி ஊழியர்கள் ஆவணங்களை சமர்பித்த பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை கேட்டபோது மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் சாரா உட்பட அவரது கூட்டாளிகள் 4பேரை கைது செய்தனர்.