குப்பைக்கு வரி கேட்டால் பொதுமக்களுக்கு கோபம் வருவதாகவும், வரியை வசூலிக்காவிட்டால் மத்திய அரசு நிதி தர மறுப்பதாகவும், அமைச்சர் கே.என்.நேரு நகைச்சுவையாக தெரிவித்தார். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்ற கதையாக நகராட்சி நிர்வாகம் இருப்பதாக அமைச்சர் கூறினார். 2017 முதல் குப்பை வரி வசூலிக்கப்படாததால், 118 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக கூறினார்.