கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை எனக் கூறி அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் நகராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் யாரும் நகரமன்ற கூட்டத்தில் பங்கேற்காததால் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.