புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, குழந்தை விநாயகர் கோட்டை கிராமத்தில் உள்ள திருவாயி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்றனர். பள்ளிவாசலில் இருந்து சீர்வரிசை எடுத்து ஊர்வலம் சென்ற இஸ்லாமியர்களை, இந்துக்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.