புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நாகை மீரா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்ட நாகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு, கப்பல் ரதம் மற்றும் கொடி ஆகியவை அலங்கார வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆண்டவர் தர்காவை அடைந்தது. தொடர்ந்து கொடிக்கு துவா ஓதப்பட்டு வாணவேடிக்கை முழங்க தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. விழாவில், கொட்டித் தீர்த்த மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.