தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர் இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சிலம்பம், கராத்தே, ஹாக்கி, ஸ்கேட்டிங், மல்யுத்தம், போன்ற பல போட்டிகள் நடைபெற்றன. சிலம்ப விளையாட்டில் வடவள்ளி தனியார் பள்ளியை சார்ந்த மாணவர் ஹரிஷ் என்பவர் 10 வயதிற்குட்பட்ட ஒற்றைக் கம்பு மற்றும் இரட்டைக் கம்பு பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் கோவை இந்திய தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகம் சார்பில் அதன் பயிற்சியாளர் வேங்கைநாதன் 18 வயதுக்கு மேற்பட்ட வாள் வீச்சு பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.