ராமேஸ்வரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் வெளியூர் பக்தர்களிடம் பூஜை, பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நெல்லையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னிடமும் பணம் பறிக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார். முன்னோருக்கு திதி கொடுப்பதற்காக தாயுடன் ராமேஸ்வரம் வந்த இளைஞரிடம் ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கடல் சீற்றம் உள்ளதால் அங்கு திதி கொடுக்க முடியாது என ஓரிடத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் 15 ஆயிரம் ரூபாய் கேட்டு படிப்படியாக இறங்கி கடைசியில் இரண்டாயிரம் ரூபாய் வாங்கியதாகவும், ஆட்டோ ஓட்டுநர் சொன்னது பொய் என பிறகு தெரிய வந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, புரோகிதர்கள் சாபமிட்டதாகவும் இளைஞர் வேதனையுடன் தெரிவித்தார்.