ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தூய்மை பணியாளர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளதை சுட்டி காட்டி நியூஸ் தமிழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று ராமநாதபுரம் மாவட்டத்தின் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹ்பூப் அலிகான் மற்றும் சார்பு நீதிபதி பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தூய்மை பணியாளர்கள் தங்கி உள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். இதில் 10 நாட்களுக்குள் தூய்மை பணியாளர்கள் தங்கி உள்ள இடத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். விரைவில் குடியிருப்புகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தூய்மை பணியாளர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார். Related Link லாட்ஜில் சடலமாக கிடந்த இளைஞர்