கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தார் சாலை அமைக்க நிதி இல்லை என நகராட்சி நிர்வாகம் கூறியதால், நிதி கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் ஈடுபட்டார். கோழியூர் 9 ஆவது வார்டு பகுதியில் தார் சாலை அமைத்து தர பலமுறை மனு அளித்தும் நிதி இல்லை என நகராட்சி நிர்வாகம் கூறியதால் அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் நீதி மன்னன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.