மத்திய அமைச்சர் அமித்ஷா, எத்தனை சங்கிப்படைகளை அழைத்துக் கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டில் பாஜக வெல்லமுடியாது என, திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். 50 ஆண்டுகள் முன்னோக்கி செல்வோமா? அல்லது பின்னோக்கி இழுக்க முயற்சிபவர்களிடம் அடிபணிய போகிறோமா? என்ற கேள்விக்கு, மக்கள் அளிக்ககூடிய விடை தான் திமுக ஆட்சியின் 2.0 என்றும் அவர் குறிப்பிட்டார்.திருவண்ணாமலை, வாணியந்தாங்கலில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, மேடையில் இளைஞர் அணி நிர்வாகிகள் வழங்கிய வெள்ளி சிம்மாசனத்தில் கெத்தாக அமர்ந்து, முதலமைச்சர் மாஸ் காட்டியதை பார்த்து, அங்கிருந்த தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அமைச்சர் அமித்ஷா எத்தனை சங்கிகளை கூட்டிக்கொண்டு வந்தாலும், தமிழகத்தை பாஜக வெல்லமுடியாது என சவால் விட்டார்.