எஸ்.புதூர் அருகே வனப்பகுதியில் சாலை அமைக்காமல் இடைப்பட்ட பகுதியில் சாலை அமைக்க கூடாது கிராம மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை அமைக்காவிட்டால் ஓட்டு போடுவதை புறக்கணிப்போம் கிராம மக்கள் ஆவேசமாக தெரிவித்தனர். 23 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலைசிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு பஞ்சாயத்து கீழவண்ணாரிருப்பில் சுமார் இரண்டு ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.மேலவண்ணாரிருப்பில் இருந்து கீழவண்ணாரிருப்பு வழியாக உரத்துப்பட்டி செல்ல சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் 23 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. அச்சாலை வனப்பகுதியில் 2 கி.மீ., செல்கிறது.பல இன்னல்களை துயரங்களையும் சந்தித்த கிராம மக்கள்இச்சாலை முற்றிலும் சேதமடைந்தநிலையில், கிராம மக்கள் பல இன்னல்களை துயரங்களையும் சந்தித்து வந்தனர். இந்நிலையில் வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி சாலை சீரமைக்கவில்லை. இதனால் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இச்சாலையில் சென்ற பள்ளி மாணவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரத்திற்கு பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் பெரியகருப்பனிடம் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் முறையீடு செய்தனர்.ரூ.1.99 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகள்இந்நிலையில் கடந்த மாதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.99 கோடியில் சாலை சீரமைக்க அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். ஆனால் வனப்பகுதியில் செல்லும் 2 கி.மீ.,-க்கு சாலை அமைக்க வனத்துறையிடம் விண்ணப்பித்து ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் அனுமதி பெறவில்லை. சாலையை முழுமையாக அமைக்காததை கண்டித்து மறியல்இதனால் முதல்கட்டமாக வனத்துறை பகுதியை தவிர்த்து 3 கி.மீ.,-க்கு மட்டும் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கீழவண்ணாரிருப்பு பகுதியில் பணிகள் தொடங்கியநிலையில், சாலையை முழுமையாக அமைக்காததை கண்டித்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதையடுத்து, பணியையும் பாதியில் நிறுத்தினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வனத்துறை அனுமதி பெறாததால் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்பட முடியாமல் உள்ளது. தேர்தலுக்குள் வனப்பகுதியையும் சேர்த்து சாலை அமைக்காவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர். Related Link நஷ்டம் உங்களுக்குத்தான்...