மதுரையில் வசித்து வரும் வட மாநிலத்தவர்கள், ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். திருமலை நாயக்கர் மகால் பந்தடி பகுதியில் வசிக்கும் ஏராளமான வடமாநிலத்தவர்கள், குடும்பத்தினருடன் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் நண்பர்கள் மீது வண்ணப்பொடி கலந்த தண்ணீரை பீச்சியடித்தும், குடும்பத்துடன் செல்ஃபி எடுத்தும் உற்சாகம் அடைந்தனர்