தூத்துக்குடி, கோவில்பட்டி... திருடியவுடன் காரில் சிட்டாய் பறக்க சாலைகள் ஏதுவாக உள்ளதாக என பகலில் காரில் சென்று நோட்டம். ஆட்கள் இல்லாத வீடுகளாக குறிவைத்து இரவுநேரங்களில் கொள்ளை. சிசிடிவி காட்சியில் முகம் பதிவாகாமல் இருக்க முகமூடி. தடயவியல் சோதனையில் சிக்காமல் இருக்க கையுறை. நகை, பணம் இல்லாவிட்டால் ஆத்திரத்தில் டிவி, பிரிட்ஜை அடித்து நொறுக்கும் திருட்டு இளைஞர்கள். 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய திருட்டு நண்பர்கள் தானாக சிக்கியது எப்படி? பின்னணி என்ன?தூத்துக்குடி, கோவில்பட்டி, கிருஷ்ணா நகர் பகுதியில உள்ள ஆளில்லாத பல வீடுகள்ல பூட்டு உடைக்கப்பட்ருந்தது. ஆனா பொருட்கள் எதுவுமே திருடுபோகல. காரணம், அந்த வீடுகள்ல இருக்குறவங்க நகைகளை வீட்ல வைக்காம பேங்க் லாக்கர்ல வச்சிருக்காங்க. ஆனாலும், ஒருவேளை நகை, பணம் இருந்து, அது திருடுபோயிருந்தா என்ன செய்ய முடியும்னு நெனச்ச, அங்க உள்ள மக்கள் எல்லாரும் ஒண்ணாபோய் போலீஸ் ஸ்டேஷன்லபோய் புகார் குடுத்துருக்காங்க.கூடவே, நைட்நேரத்துல ரெண்டு இளைஞர்கள் தெருவுல நடமாடுற காட்சி உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும் குடுத்துருக்காங்க. அந்த வீடியோவுல இருந்த ஒரு இளைஞரோட முகம் தெளிவாக தெரிஞ்சிருக்குது.அந்த முகத்தை எங்கேயே பாத்தமாதிரி இருக்குதேனு நெனச்ச காவலர்கள் பல போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி செக் பண்ண சொன்னதோட தாங்களும் செக் பண்ணிருக்காங்க. அப்பதான், அந்த இளைஞர் பல திருட்டு வழக்குல தொடர்புடைய நபர் அப்டிங்குறதே தெரியவந்துச்சு.அடுத்து அந்த இளைஞரோட செல்போன் எண்ணை டிரேஸ் பண்ணிருக்காங்க. அதுல, கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளையே காட்டி உள்ளது. அதனால அந்த பகுதிகள்ல தீவிர கண்காணிப்புல ஈடுபட்ருக்காங்க போலீசார்.அந்த வகையில சாத்தூர்ல வாகன சோதனையில ஈடுபட்ருந்துருக்காங்க போலீசார். அப்போ, அவ்வழியா வந்த ஒரு சிவப்பு நிற கார், காவலர்கள பாத்ததும் மின்னல்வேகத்துல போயிருக்குது.அதனால உஷாரான போலீசார் கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து முக்கிய சாலைகள் எல்லாத்துலயும் காவலர்கள் கண்கொத்தி பாம்பா கண்காணிச்சிருக்காங்க. அப்பதான், கோவில்பட்டி புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல உள்ள 4 வழிச்சாலையில சிவப்பு நிற கார் வந்துருக்குது. சாத்தூர்ல சில காவலர்கள் மட்டும் நின்னதால ஈசியா பறந்த சிவப்பு நிற காரால 4 வழிச்சாலையில பறக்க முடியல. காவலர்கள் கூட்டமே நின்னதால காரை நிறுத்த வேண்டிய கட்டாயமாகிருச்சு.கார்ல இருந்து இறங்குன ரெண்டுபேர்ல ஒருத்தர் தான் கிருஷ்ணா நகர் மக்கள் குடுத்த சிசிடிவி காட்சியில பதிவான இளைஞர்னு தெரிஞ்சிருக்குது.அடுத்து, ரெண்டுபேர்கிட்டயுமே விசாரணையில இறங்குனப்பதான் கிருஷ்ணா நகர்ல மட்டுமில்ல, 7 மாவட்ட போலீசார் கண்ணுல மண்ண தூவுன முகமூடி கொள்ளையர்களே அவங்கதானு தெரியவந்துச்சு. விருதுநகர், அருப்புக்கோட்டை கைலாச ஊரணி தெருவை சேர்ந்த சிவக்குமாரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த சாந்தகுமாரும் நண்பர்கள்.இந்த ரெண்டுபேரோட முக்கிய வேலையே திருட்டு, வழிப்பறி, கொள்ளை தான். அதுக்காகவே ஒரு காரும் வச்சிருக்காங்க. அந்த கார்ல பகல்நேரம் ஒவ்வொரு ஏரியாவாபோய் ஆளில்லாத வீடுகள் எது? கொள்ளையடிச்சபிறகு நேக்கா தப்பிக்கிற மாதிரி சாலைகள் இருக்குதா? சிசிடிவி காட்சியில சிக்காம இருக்க என்ன பண்ணலாம்? போலீஸ்கிட்ட சிக்காம இருக்க என்ன பண்ணலாம்னு பிளான் பண்ணுவாங்க.பெரிய பெரிய வீடுகளா இருக்கணும், அதேநேரம் பெருசா ஆள் நடமாட்டமும் இருக்கக்கூடாதுனு பக்காவா ஸ்கெட்ச் போடுற ரெண்டுபேரும், நைட்நேரத்துலபோய் அந்த வீட்டோட பூட்டுகளை ஒடச்சி கொள்ளை சம்பவத்துல ஈடுபட்ருக்காங்க.சிசிடிவி காட்சியில முகம் பதிவாகாம இருக்க முகத்துல முகமூடி போட்டுக்குற கொள்ளையர்கள், தடயவியல் சோதனையில சிக்காம இருக்க கையுறையும் போட்டுதான் கொள்ளை சம்பவத்தையே செஞ்சிருக்காங்க.இதே டெக்னிக்கை பயன்படுத்தி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர்னு 7 மாவட்டங்கள்ல கொள்ளையடிச்சிருக்காங்க.அதனால் 7 மாவட்டத்துல உள்ள பல்வேறு காவல் நிலையங்கள்ல 40க்கும் மேற்பட்ட வழக்குகள் ரெண்டுபேர்மேலயுமே இருக்குது. ரெண்டுபேரையும் போலீசார் வலைவீசி தேடிட்டு இருந்துருக்காங்க. ஆனா சிக்கல. 7 மாவட்ட போலீசாருக்கும் டிமிக்கி குடுத்துட்டு இருந்த ரெண்டுபேரையும் கைது செஞ்ச காவலர்கள் அவங்ககிட்ட இருந்து காரையும் பறிமுதல் பண்ணிருக்காங்க. இதையும் பாருங்கள் - "நான் BJPல பெரிய ஆள்" உங்கள ஈசியா காலி பண்ணிடுவேன், விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள் | Crime