சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி லட்டு விஷயத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் வன்மத்தோடு பேசியிருக்கும் பியூஸ் மானுஷ் போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.