வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த குருவிகளுக்கு உதவி செய்ததாக, விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஐபோன்களை கடத்தி வந்த 13 குருவிகளை, சோதனை செய்யாமல் வெளியே அனுப்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.