சென்னை கோயம்பேடு மற்றும் போரூரில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆம்னி உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உயர்நீதிமன்றத்தில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு கோயம்பேடு மற்றும் போரூரில் இருந்து இயக்கபடும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் வழியாக செல்லும் என்று அன்பழகன் அறிவித்துள்ளார்.