ஒணம் பண்டிகையையொட்டி ஈரோட்டில் கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி போன்று வீடுகளில் பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர். பாலாஜி கார்டன் பகுதியில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். அவர்கள் புத்தாடை அணிந்தும், கதகளி பாத்திரங்களை பூ கோலமிட்டும் மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து கேரள பெண்கள் பாரம்பரிய நடனமும் ஆடி உற்சாகமடைந்தனர்.