புதுச்சேரியில் மேலும் ஒரு பெண் குழந்தைக்கு HMP வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 வயது சிறுமி இந்த தொற்று பாதிப்புக்கு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வயது பெண் குழந்தையும் தொடர் காய்ச்சல், சளி, இருமல் காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.