சென்னை, மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில், வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 86 பேர் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காப்பகத்தில், தங்கும் பயனாளிகளுக்கு பாய், தலையணை மற்றும் போர்வைகளை உதயநிதி வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன என்றார்.