மனித கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அனைத்து கடைகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடங்குளத்தின் வடக்கு பகுதியில், சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மனித கழிவு மேலாண்மை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம் செயல்படுத்தப் பட்டால், காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்படும் என்பதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக திட்டத்தை கைவிட வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கூடங்குளம் பகுதி முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.