சென்னை குன்றத்தூர்- பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றிய நிலையில்,தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூர் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததாக கூறி. அதனை இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.