புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வெள்ளாள விடுதி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த வேளாள விடுதி கிராமத்தில் சோலார் பேனல் அமைப்பதற்காக தனியார் நிறுவனம் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தை கையகப்படுத்தி சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த சோலார் பேனல்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சோலார் பேனல் அமைக்கப்படும் இடத்தின் அருகே அக்னி ஆறு செயல்பட்டு வருகிறது. இந்த அக்னி ஆற்றங்கரையை சோலார் பேனல் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் மேலும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் கடலை உளுந்து சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளதாகவும். அந்த சாகுபடி பயிர்களை அறுவடை செய்து வழக்கமாக கொண்டு செல்லும் பாதையை சோலார் பேனல் நிறுவனத்தினர் சுற்றுச்சுவர் அமைத்து விவசாயிகள் கொண்டு செல்லாத அளவிற்கு சுற்றுச் சுவர் அமைத்து வருவதாகவும் இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆயிரக்கணக்கில் தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதை கண்டித்தும் தென்னம்பிள்ளைகளை அழிப்பது பிள்ளைகளை அழிப்பதற்கு சமம் என்று கூறி விவசாயிகள் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் முற்றிலுமாக கைவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு நேரடி ஆய்வு மேற்கொண்டு விவசாய நிலங்களில் சோலார் பேனல் அமைப்பதை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link பண்ணவாடி காவிரி ஆற்றில் செம்மண் கொள்ளை