தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.