புதுக்கோட்டையில் நடந்த வாகன விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. மணமேல்குடி இடையாத்திமங்கலத்தை சேர்ந்த 28 வயதான முத்துப்பாண்டி விபத்தில் காயமடைந்ததையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்த நிலையில், இருதயம், கண் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகளை தானமாக பெறப்பட்டது. உடல் உறுப்புகள் எடுத்துவரப்பட்ட பெட்டியினை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையும் பாருங்கள் - டாக்டர் பேச்சால் கொந்தளித்த நோயாளிகள் | Thiruttani | HospitalIssue | DoctorIssue