டிட்வா புயல் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் பெய்த கன மழையில் வடக்கு பட்டு மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் நடவு செய்யப்பட்டு உள்ள சுமார் 250 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.கண்களுக்கு எட்டிய தூரம் வரை வயலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் தெரியாதவாறு ஏரி போல் காட்சி அளிக்கிறது.டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மூன்று நாட்களாக மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் நடவு செய்யப்பட்டு உள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.வடக்குப்பட்டு, கக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டு உள்ள சுமார் 250 ஏக்கர் தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.கண்களுக்கு எட்டிய தூரம் வரை வயல்கள் தண்ணீரால் சூழ்ந்து பயிர்கள் தெரியாதவாறு ஏரி போல் காட்சி அளிக்கிறது.வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள இரண்டு குளங்களுக்கு இடையில் சாலை போட்டதால் தண்ணீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் வயல்களுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது.அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இல்லாததே பயிர் சேதத்திற்கு காரணம் என குமுறும் விவசாயிகள் குறுவை அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்குள் மறுபடியும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வட்டிக்கு கடன் வாங்கி ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.