திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில் மீண்டும் விவசாய நிலங்களிலேயே முளைத்துள்ளாதால் விவசாயிகள் கவலையடைந்தனர். ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் மீண்டும் வயலிலே முளைத்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.