பனை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதி அளிக்கப்படாததை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் வடபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பனை தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். கள் இறக்க அனுமதி அளிக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.