மேட்டூர் அணையின் மொத்த பரப்பளவு 60 சதுர மைல்கள். மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழே சரியும் போது நீர் தேக்க பகுதிகளான மாசிலாபாளையம், பண்ணவாடி, கோட்டையூர், செட்டிபட்டி ஆகிய பகுதிகளில் காவிரி கரையோர விவசாயிகள் மக்காச்சோளம் ,வாழை, பருத்தி, எள் ஆகியவை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பண்ண வாடி பரிசல் துறையில் இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரங்களுடன் வரும் சமூக விரோதிகள் லோடு,லோடாக லாரிகளில் செம்மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 5 முதல் 10 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மண் கொள்ளை நடைபெற்றுள்ளது. இது குறித்து வருவாய் துறைகளுக்கு தகவல் தெரிவித்தும் மண் அள்ளுவதை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கரையோர பொதுமக்கள் விவசாயம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.மேலும் 120 அடி உயரம் கொன்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது அணையின் நீர் 92 அடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் மீண்டும் உயரும் போது பண்ணவாடி பகுதிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் மண் அள்ளிய குழியில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்புள்ளது.எனவே தமிழக அரசு தலையிட்டு செம்மண் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேட்டூர் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். Related Link இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்